பல்வலிக்கு யூடியூபை பார்த்து வைத்தியம் செய்துகொண்ட இளைஞர் மரணம்!

இந்தியாவில், 26 வயதான இளைஞர் ஒருவர் பல்வலிக்கு யூடியூபை பார்த்து வைத்தியம் பார்த்ததால் உயிரை விட்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும், எந்த பிரச்சனை என்றாலும் யூடியூபை பார்த்து தீர்வு கண்டுபிடிப்பது சாதாரண ஒரு விடயமாகி விட்டது. சமூக வலைத்தளங்களில் நல்லதும் இருக்கின்றன, கெட்டதும் இருக்கின்றன.
  
அந்த வகையில், 26 வயதான நபர் தனது பல்வலிக்கு சிகிச்சையளிப்பதற்கு யூடியூப் பார்த்து மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் மஹ்தோ என்ற 26 வயது நபர் கடுமையான பல்வலியில் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மஹ்தோ, ஹசாரிபாக் பகுதியில் உள்ள நூதன்நகர் காலனியில் விடுதி ஒன்றில் தங்கி போட்டி தேர்வுக்காக படித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு வாரத்திற்கு முன்பு பல் வலி ஏற்பட்டது, மருத்துவரிடம் ஆலோசிப்பதற்குப் பதிலாக பல யூடியூப் வீடியோக்களை பார்த்துள்ளார்.

அதில், பரிந்துரைக்கப்பட்ட அரளி விதைகளை சாப்பிடலாம் என்று முடிவு செய்துள்ளார்.
மஹ்தோ யூடியூப் வீடியோக்களில் இருந்து இந்த வைத்தியங்களைப் பின்பற்றியதாகவும், அதிக எண்ணிக்கையிலான அரளி விதைகளை உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதை. உட்கொண்டதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்தது ஹசாரிபாக்கில் உள்ள பிஷ்னுகர் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். உடலக்குறைவு ஏற்பட்டால் சமூக வலைதளங்களை பார்க்காமல் அருகில் உள்ள மருத்துவர் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!