மர்மமாக மாயமான சீன வெளியுறவுத்துறை அமைச்சர்!

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் குயின் கேங் திடீரென அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்த குயின் கேங்( Qin Gang) கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பொதுவெளியில் தோன்றாமல் தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்கி சீன அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
    
அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் வழங்கப்படவில்லை, அத்துடன் அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. ஆனால் விவரங்கள் எதுவும் தெளிவாக வழங்காமல் அவர் உடல் நலக் காரணங்களால் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைமறைவு ஆவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கனை அமைச்சர் குயின் கேங் பெய்ஜிங்கில் சந்தித்து இருந்தார். அப்போது அடுத்த சந்திப்பு வாஷிங்டனில் நடத்தப்படும் என்பதற்கு இருதரப்பும் சம்மதம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமைச்சர் குயின் கேங் காணாமல் போய் உள்ளார், அத்துடன் அமைச்சர் குயின் கேங் திடீர் தலைமறைவை தொடர்ந்து, பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் மற்றும் யூரோடிப்ளமசியின் தலைவர் ஜோசப் பொரெல் தங்களது விஜயத்தை ரத்து செய்துள்ளனர்.

இதற்கிடையில் சீன அரசின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாங் யீ(wang yi, 69) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2013ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை சீன அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சராக வழிநடத்தி இருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!