பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் ஆசிய நாடு!

ஆசிய நாடான சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கிய பெண் உட்பட இருவருக்கு இந்த வாரம் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. சிங்கப்பூரை பொறுத்தமட்டில், கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த வாரம் பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
    
வெளியான தகவலின் அடிப்படையில், 50 கிராம் அளவுக்கு போதை மருந்து கடத்தியதாக கைதான 56 வயது நபருக்கு புதன்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரியவந்துள்ளது.
அவருக்கு சாங்கி சிறையில் மரண தண்டனை நிறைவேற்ற இருப்பதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர். இன்னொருவர் 45 வயதான சரிதேவி ஜமானி. 2018ல் இவர் 30 கிராம் அளவுக்கு போதை மருந்து கடத்தியுள்ளார் என்றே கூறப்படுகிறது.

இவருக்கு வெள்ளிக்கிழமை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும். சரிதேவிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால், 2004ம் ஆண்டிற்கு பின்னர் முதல்முறையாக பெண் ஒருவருக்கு தூக்கு தனடனை நிறைவேற்றப்படுவதாக இருக்கும் என உள்ளூர் மனித உரிமைகள் ஆர்வலர் கோகிலா அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நாட்டவர்களான இருவருக்கும், மரண தனடனை நிறைவேற்றப்படுவது குறித்து அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் நாட்டில் 500 கிராமிற்கும் அதிகமாக கஞ்சா அல்லது 15 கிராமிற்கும் அதிகமாக ஹெராயின் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!