முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் ரணிலின் அதிரடி நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை குறைக்க சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கமைய உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம், நீர் கட்டணம், கையடக்க தொலைபேசி கட்டணங்கள் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் இடைநிறுத்தப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் செயலாளர் கடந்த மாதத்திற்கான சட்டமூலங்களை ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பித்ததை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளின் சட்டமூலங்கள் எதனையும் ஜனாதிபதி அலுவலகம் இப்போது தீர்த்து வைக்காது என முன்னாள் ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்புரிமைகள் தொடர்பில் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் சட்டமா அதிபர் அலுவலகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் உத்தரவின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகன பராமரிப்பு மற்றும் எரிபொருளுக்கான நிதி மட்டுமே வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!