சஜித் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர்: விக்னேஸ்வரன் இடித்துரைப்பு

சஜித் பிரேமதாச ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(04.08.2023) செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

சமகால அரசியல் குறித்து ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சடடம் பற்றி ஜனாதிபதி நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது. அது வரவேற்கத்தக்கது. அவர் உரையாற்றினால்தான், அவரது மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவரும்.

தனிநபர் வரைவுக்கு ஆதரவு
சஜித் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர்: விக்னேஸ்வரன் இடித்துரைப்பு | Sajith Premadasa Is Suitable For The Presidency
பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்த்து 13ஐ நடைமுறைப்படுத்துவது குறித்தும் அவர் பேசக்கூடும். அதை பிரச்சினையாக மாற்றி 13 ம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்தாமலிருப்பதை தமிழ்த்தலைவர்கள் தவிர்க்கப் பார்க்கின்றோம்.

எந்தவொரு அரசியல்வாதியும் எது சரியென்று செய்வதில்லை. மாறாறக எதை செய்தால் மக்களின் ஆதரவும் கண்டனமும் கிடைக்கும் என்பதைப் பார்த்தே செய்கின்றார்கள்.

ரணிலும் அதற்கு விதிவிலக்கல்ல. ரணில் இந்தியா சென்று வந்த பின்னணியில் அவர் அது குறித்தும் பேசக்கூடும். எனவே அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர் உரையாற்றுவதன் மூலம்தான் தெரிந்துகொள்ளமுடியும்.

13இல் இருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்குவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்பன்பில கொண்டு வந்திருக்கக்கூடிய தனிநபர் வரைவுக்கு ஆதரவு கிடைக்குமா என்று தெரியாது. அவர் நினைத்ததை போல் 13ஐ குறைக்கவோ கூட்டவோ முடியாது.

எங்கள் மக்களுக்கு அதிகாரங்கள் கிடைக்கவேண்டும். அதற்காகத்தான் நாம் 13ஐப் பலப்படுத்தும் திட்டத்தை ஆதரிக்கின்றோம். எல்லாத் தமிழ்க் கட்சிகளும் சமஷ்டியைத்தான் தமது இலக்காகக் குறிப்பிடுகின்றன.

அதில் அவற்றுக்கிடையில் வேறுபாடில்லை. ஆனால் அதை எப்படி அடைவது என்று யாரிடமும் எந்தத் திட்டமும் இல்லை. என்னிடமும் இல்லை. சிறிது சிறிதாக எங்களுடைய அதிகாரங்ளைக் கையிலெடுத்துக்கொள்ள வேண்டும்.

சமஸ்டி, கூட்டு சமஸ்டி என சில கட்சிகள் கூறினாலும் இவை அனைத்தும தூரத்திலுள்ள குறிக்கோள். அதை அடைவதற்கு முன்னர் மக்களுக்கு அதிகாரங்களைப் பெற 13ஐ நடைமுறைப் படுத்த வேண்டும்.

தற்போது எவ்வித அதிகாரங்களும் அற்ற நிலையில் அதிகாரங்களைப் பெற்று அதை அதிகரிக் வேண்டிய தேவையுள்ளதால்தான் நாம் 13ஐக் கோருகின்றோம். ஆயினும் அது தீர்வாக அமையாது.

13ஐப் பெற்றால் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக சிங்களத் தரப்பு கூறினாலும் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

மக்களுக்கு அதிகாரங்களை பெற்றுக் கொள்ள கூடியவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பௌத்தம் இலங்கைக்கு வந்து 700 வருடங்களின் பின்னரே சிங்கள மொழியும் சிங்கள மக்களும் வந்தார்கள்.

தற்போது பிழையான வேலைகளில் ஈடுபட்டு சிங்களவர்கள் இருந்தார்களென எடுத்துக்காட்ட முனைகின்றார்கள். இது சம்பந்தமாக தொல்பொருட் திணைக்களத்துடன் பேச வேண்டிய நிலையுள்ளது. என தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!