விமான கட்டணங்களை உயர்த்தும் பிரான்ஸ்!

அடுத்த பட்ஜெட்டில், விமான பயணச்சீட்டுக் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், அடுத்த பட்ஜெட்டில் விமான பயணச்சீட்டுகளின் விலையை அதிகரிக்க இருப்பதாக நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சரான Clément Beaune தெரிவித்துள்ளார்.

ஆனால், எவ்வளவு விலை உயர்த்தப்படும் என்பது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
பலர் தன்னிடம், விமான பயணச்சீட்டுகளைவிட, ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக தெரிவிப்பதாகக் கூறும் அவர், ரயில்வே துறையில் முதலீடு செய்ய பணம் தேவைப்படுகிறது என்கிறார்.

ஆகவே, 2024ஆம் ஆண்டின் பட்ஜெட்டில், விமான பயணச்சீட்டுகள் மீதான வரியை அதிகரிக்க இருப்பதாக தெரிவிக்கும் Clément Beaune, அதிலிருந்து கிடைக்கும் பணத்தை ரயில்வே துறையில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!