“10 வயதிற்கு மேல் பெண்கள் படிக்க கூடாது” – தலிபான் அரசு அதிரடி!

ஆப்கானிஸ்தானில் 10 வயதுக்கு மேற்பட்ட மாணவிகள் பாடசாலைக் கல்வியை தடை செய்ய தலிபான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த தடை ஏற்கனவே அந்நாட்டின் பல மாகாணங்களில் அமுலில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
    
அதன்படி, 10 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாடசாலைகள் அல்லது கல்வி நிறுவனங்களில் சேர்க்க வேண்டாம் என தலிபான் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, தலிபான்கள் பெண்களின் கல்வி உரிமை உட்பட பல உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

அதேசமயம் பெண்கள் அழகு நிலையங்கள், ஜிம்கள் மற்றும் பூங்காக்களுக்குச் செல்வதைக் கூட தடை செய்திருந்த நிலையில் தற்போது பெண்களின் கல்விக்கும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!