இந்தியா-சீனா எல்லையில் 7 புதிய சுரங்கப்பாதைகள்!

இந்தியா-சீனா எல்லையில் 7 புதிய சுரங்கப்பாதைகளை இந்தியா உருவாக்கி வருகிறது. இந்தியா-சீனா எல்லையில் 7 புதிய சுரங்கப்பாதைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தெரிவித்துள்ளார்.
    
கடந்த மூன்று ஆண்டுகளில் ஐந்து சுரங்கப் பாதைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பத்து தற்போது செயல்பாட்டில் உள்ளன மற்றும் ஏழு திட்டமிடல் கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கூறினார். மேலும் இந்த சாலைகள் எல்லையில் அதிவேக இணைப்பை கணிசமாக அதிகரிக்கும் என்று கூறினார்.

இந்த முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களில் 9.02 கிமீ நீளமுள்ள அடல் சுரங்கப்பாதை அடங்கும், இது 2020-ல் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது, இதன் மூலம் லாஹவுல்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கிற்கு ஆண்டு முழுவதும் அணுகலை வழங்குகிறது.

அசாமின் குவஹாத்தி மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் இடையேயான இணைப்பை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சேலா சுரங்கப்பாதை ஆகஸ்ட் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.

‘2014 முதல், எல்லைச் சாலை அமைப்பிற்கான பட்ஜெட்டை 2013-14ல் ரூ.3,782 கோடியிலிருந்து 2023-24ல் ரூ.14,387 கோடியாக உயர்த்தியதில் இருந்து, எல்லைக் கட்டமைப்புகளை மேம்படுத்த மோடி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பட்ஜெட் கிட்டத்தட்ட நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

2008 முதல் 2014 வரை கட்டப்பட்ட பாலங்களின் நீளம் 7270 மீட்டர். மாறாக, 2014-2022ல் கட்டப்பட்ட பாலங்களின் நீளம் 22439 மீட்டராக அதிகரித்துள்ளது. மேலும், அருணாச்சல பிரதேசத்தில் சுமார் 1,800 கி.மீ நீளமுள்ள எல்லை நெடுஞ்சாலை அமைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் உள்நாட்டு போக்குவரத்து மற்றும் எல்லை தொடர்பை கணிசமாக அதிகரிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!