பிளாஸ்டிக் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

2018 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய 812 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (11.08.2023)  நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு  பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களின் அளவு  2 பில்லியன் கிலோகிராம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இலங்கைக்குள் பிளாஸ்டிக் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் இதுவரை 7 வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இந்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை படிப்படியாகக் குறைவதாகத் தோன்றுவதாகவும், சட்டங்களை இயற்றுவதற்குப் பதிலாக மனோபாவத்தில் மாற்றத்தின் ஊடாக தான் பிளாஸ்டிக் பாவனையைக் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!