தீக்கிரையான அமெரிக்க மாகாணம்: அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் ஏற்பட்ட மிக மோசமான காடுத்தீயால் இதுவரை 93 பேர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்லது. மாகாண ஆளுநர் தெரிவிக்கையில், ஹவாய் எதிர்கொண்ட மிக மோசமான இயற்கைப் பேரழிவிற்குப் பிறகு லஹைனாவில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
    
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில், வரலாற்றுச் சிறப்புமிக்க லஹைனாவில் 93 பேர்கள் மரணமடைந்துள்ளனர். குறித்த பகுதியானது ஹவாய் மாகாணத்தின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மௌய் தீவில் அமைந்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் அமெரிக்கா எதிர்கொண்ட காட்டுத்தீ சம்பவங்களில் இது மிக் மிக மோசமானது என்றே குறிப்பிடுகின்றனர். அத்துடன் ஹவாய் மாகாணம் இதுவரை எதிர்கொண்ட கொடூரமான காடுத்தீ இதுவென்றும் தெரிவித்துள்ளனர்.

2018ல் வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 85 பேர்கள் கொல்லப்பட்டதுடன் ஒரு நகரமே மொத்தமாக சேதமடைந்தது. ஆனால் 1918ல் ஏற்பட்ட Cloquet தீ விபத்தானது ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மொத்தமாக சாம்பலாக்கியதுடன் 453 பேர்கள் கொக்கப்பட்டனர்.
அதன் பின்னர் மெளய் தீவில் உள்ள லஹைனாவில் தான் 93 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.

லஹைனா பகுதியை மறுசீரமைக்க 5.5 பில்லியன் டொலர் செலவாகும் என்றே கூறப்படுகிறது.
சுமார் 2,200 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், 2,100 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது. வீடுகளை இழந்த மக்களுக்காக 1,000 ஹொட்டல் அறைகளை அதிகாரிகள் தரப்பு ஏற்பாடு செய்து அளித்துள்ளனர்.

13,000 பேர்கள் வசித்துவந்த லஹைனாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்டிடத்தையும் காட்டுத்தீ பதம் பார்த்துள்ளது. தற்போது சுற்றுவட்டாரத்தில் உள்ள 65 மாவட்ட தீயணைப்பு வீரர்கள் ஹவாய் மாகாணத்தில் களமிறக்கப்பட்டு, மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மூன்று தீவுகளில் பணியாற்றி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!