சிறிலங்காவுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா உறுதி

ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் அனைத்துலக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற, அர்ப்பணிப்புடன் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆட்களைக் கடத்துதலுக்கு எதிரான உலக நாளை முன்னிட்டு, அனைத்துலக தொழிலாளர் அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்க பதில் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் இதனைத் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சுமார் 2.5 மில்லியன் டொலர் வரையான மூன்று கொடைகளுக்கு நிதி அளித்துள்ளது.

இந்தக் கொடைகளை, ஆட்களைக் கடத்துபவர்களுக்கு எதிரான நீதித்துறை விசாரணை, மற்றும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவும் செயற்பாடுகளுக்கும், ஆட்கடத்தல் தொடர்பான காத்திரமான தரவுகளை சேகரித்து, அறிக்கையிடுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகள் மற்றும் பாதுகாப்புக்கும் பயன்படுத்த முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!