பெறுமதி சேர் வரிச் சட்டம் குறித்து அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி


2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று (28.08.2023) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  

அதன்படி, பெறுமதி சேர் வரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தை திருத்தும் வகையில், 01.01.2024 முதல் எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டு வரி முறையை ஒழிப்பதற்கு 06.05.2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வரைவினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!