ராணுவ வீரர்கள் கல்லறையில் நடனமாடிய சகோதரிகள்: உக்ரைன் விதித்த தண்டனை!

உக்ரைனில் ராணுவ வீரர்களின் கல்லறையில் நடனமாடிய சகோதரிகள் இரண்டு பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். உக்ரைனின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 24ம் திகதி உயிரிழந்த இராணுவ வீரர்களின் கல்லறையில் சகோதரிகள் இரண்டு பேர் நடனமாடி வீடியோ எடுத்ததுடன் அதை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்தது வைரலானது.
    
அந்த வீடியோவில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் முன்னால் இளம் பெண் ஒருவர் நடனமாட அதனை அவரது சகோதரி வீடியோ எடுத்துள்ளது தெரிய வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து அதை சகோதரிகள் உடனடியாக சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். மேலும் இதற்காக மன்னிப்பு கேட்டதுடன், தங்களது தந்தையின் கல்லறைக்கு சென்ற போது எடுத்த வீடியோ என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த வீடியோவை வியாழக்கிழமை பார்த்த உக்ரைனிய காவல்துறை, சகோதரிகளின் இருப்பிடத்திற்கு சென்று அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் ராணுவ வீரர்களின் கல்லறையை அவமதிப்பு செய்ததற்காக சகோதரிகள் இருவரும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் பொலிஸார் விசாரணையின் போது, சகோதரிகள் இருவரும் இறந்தவர்களின் நினைவை இவ்வாறாக போற்றுவதற்காக கல்லறைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் இரண்டு பெண்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!