கொலம்பிய ஜனாதிபதியே என்னை கொல்ல டிரோன்களை அனுப்பினார்- வெனிசூலா ஜனாதிபதி

கொலம்பியாவே டிரோன்களை பயன்படுத்தி என்னை கொலை செய்ய முயற்சித்தது என வெனிசூலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ தெரிவித்துள்ளார்.

வெனிசூலா ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ டிரோன் வெடிகுண்டு தாக்குதலிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்துள்ள அவர் டிரோன்களை பயன்படுத்தி என்மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான முயற்சி குறித்து மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் இது வலதுசாரி சதி என்பது அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சிக்கு கொலம்பியாவில் உள்ளவர்களும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ளவர்களும் காரணம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டிரோன் தாக்குதல் முயற்சி இடம்பெற்ற பின்னர் நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அவர் என்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றன என குறிப்பிட்டுள்ளார்.

கொலம்பிய ஜனாதிபதி யுவான் மனுவல் சன்டோஸ் இந்த சதி முயற்சியின் பின்னால் உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னர் அறியப்படாத ரீசேர்ட்டில் உள்ள படையினரின் தேசிய இயக்கம் என்ற அமைப்பு இந்த தாக்குதல் முயற்சிக்கு உரிமை கோரியுள்ளது.

சமூக ஊடகங்களில் இதனை தெரிவித்துள்ள குறிப்பிட்ட அமைப்பு தாங்கள் இரு டிரோன்களை பயன்படுத்தியதாகவும் எனினும் சினைப்பர்கள் அவற்றை சுட்டு வீழ்த்திவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளது.

அவர்களின் பலவீனத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம் இன்று எங்களிற்கு வெற்றி கிட்டவில்லை ஆனால் விரைவில் நாங்கள் வெற்றிபெறுவோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!