நாய்களுக்கு கால் சுடப் போகிறதாம்! – சப்பாத்து அணியச் சொல்லும் சுவில் காவல்துறை

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சூரிச் நகர காவல் துறையினர் வெப்ப அலைகளில் இருந்து நாய்களைக் காக்க அவற்றுக்கும் காலணிகளை அணிவிக்குமாறு அவற்றின் உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் காற்றில் வெப்ப அலைகள் தற்போது வீசி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் 1864க்கு பிறகு அதிக அளவிலான கோடைக் கால வெப்பம் இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் பதிவாகியுள்ளது.

சாலைகளில் உள்ள நடைபாதைகள் மிகவும் சூடாகி இருக்கும் என்பதால் தங்கள் ‘நான்கு கால் நண்பர்களை’ எவ்வாறு வெப்பத்தில் இருந்து பாதுகாப்பது என்று காவல் துறை இந்தப் பிரசாரம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி வருகிறது. நாய்களை வெளியே அழைத்துச் செல்வதற்கு முன்பு வெப்ப அளவு எவ்வளவு என்பதை தங்களின் கைகளை ஐந்து நொடிகள் தொடர்ந்து நிலத்தில் வைத்து அறிந்து சோதித்துக்கொள்ளுமாறு சூரிக் காவல் துறையினர் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!