கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே! : கொதித்தெழுந்த கமல்

மறைந்த தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் கொடுக்காதது குறித்த நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்குமாறு கோரிக்கை எழுந்தது. இந் நிலையில் அங்கு இடம் ஒதுக்குவது தொடர்பாக சட்டச்சிக்கல்கள் இருப்பதால் காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

தமிழ் நாடு அரசும் வழக்கு விசாரணையில் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் இச் செயலுக்கு நடிகர் ரஜினி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் நடிகர் கமலஹாசனும் தற்போது கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில்,

“அண்ணா இருந்த போது கழகம் காத்திட வளர்த்த இரு தம்பிகள் கருணாநிதியும் எம.ஜி.ஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு

எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே!

எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால் கண்டிப்பாக அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!