மக்­கள் மன­தை­யும் வெல்­வதே இரா­ணு­வத்­தி­ன­ரின் இலட்­சி­யம்- தர்­சன ஹெட்­டி­யா­ராச்சி

போர் அற்ற இன்­றைய அமை­திச் சூழ­லில் யாழ்ப்­பாண மாவட்ட மக்­க­ளின் மனங்­களை வெற்றி கொள்­கின்ற இலட்­சி­யத்தை நோக்கி இரா­ணு­வத்­தி­னர் பற்­று­றுதி­யு­டன் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். போரா­லும், போரின் எச்­சங்­க­ளா­லும் காயப்­பட்டு இருக்­கின்ற மக்­க­ளின் மனங்­களை ஒரு இர­வுக்­குள் ஆற்­றுப்­ப­டுத்த முடி­யாது என்­பதை நாம் அறி­வோம். தூர நோக்கு, தீர்க்­க­த­ரி­ச­னம், இதய சுத்தி ஆகி­ய­வற்­று­டன் மக்­க­ளுக்­கான எமது சேவை­களை தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வரு­கின்­றோம்.

தேசிய பாது­காப்­புக்­குப் பங்­கம் ஏற்­ப­டாத வகை­யில் மக்­க­ளின் உணர்­வு­கள் சம்­பந்­தப்­பட்ட விட­யங்­க­ளைக் கையாண்­டும் வரு­கின்­றோம். சித்­தி­ரைப் புத்­தாண்­டுப் பரி­சாக பெருந்­தொகை நிலத்தை மக்­க­ளுக்கு விடு­வித்­துக் கொடுத்­துள்­ளோம். இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட கட்­ட­ளைத் தள­பதி மேஜர் ஜென­ரல் தர்­சன ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் அனுப்பி வைத்­துள்ள ஊட­கக் குறிப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
துர­திஷ;டவ­ச­மாக பிரி­வி­னை­வா­தம், போர் ஆகி­யன தமிழ், சிங்­கள மக்­க­ளைப் பிரித்து விட்­ட­போ­தி­லும் போருக்­குப் பிந்­திய அமை­திச் சூழல் மீண்­டும் இரு இனங்­க­ளும் ஐக்­கி­யம், சமா­தா­னம், சகோ­த­ரத்­து­வம், சாந்தி, சகிப்­புத் தன்மை, புரிந்­து­ணர்வு ஆகி­ய­வற்­று­டன் வாழக் கூடிய இயல்பு நில­மையை மீண்­டும் ஏற்­ப­டுத்­தித் தந்­துள்­ளது.

இவ்­வா­றான ஒரு மகிழ்ச்­சி­யான தரு­ணத்­தில் யாழ்ப்­பாண மாவட்ட மக்­க­ளு­டன் சேர்ந்து தமிழ் – சிங்­கள சித்­தி­ரைப் புத்­தாண்­டைக் கொண்­டா­டு­வ­தில் நாமும் பேரு­வகை அடை­கின்­றோம். மீண்­டும் ஒரு போர் வரக்­கூ­டாது என்று எல்­லோ­ரை­யும் போலவே நாமும் பெரு­வி­ருப்­பம் கொண்­டி­ருக்­கின்­றோம். அதற்­கா­கவே எமது உடல், உழைப்பு, உயிர் ஆகி­ய­வற்றை அர்ப்­ப­ணித்­துச் செயற்­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றோம்.

மீண்­டும் ஒரு போர் வேண்­டாம் என்­கிற முக்­கி­யத்­து­வம் வாய்ந்த செய்­தியை எமது உற­வு­க­ளுக்­கும், நாட்டு மக்­க­ளுக்­கும், குறிப்­பாக இளைய தலை­மு­றை­யி­ன­ருக்­குக் கற்­பித்­துக் கொடுத்து அவர்­களை நாட்­டுக்­கும், வீட்­டுக்­கும் பயன் கொடுக்­கின்ற நற்­பி­ர­ஜை­க­ளாக வளர்த்­தெ­டுங்­கள் என்று இரா­ணு­வத்­தின் யாழ்ப்­பாண மாவட்­டக் கட்­ட­ளைத் தள­பதி என்­கிற விதத்­தில் இத்­த­ரு­ணத்­தில் விந­ய­மா­கக் கேட்­டுக் கொள்­கின்­றேன்.

30 ஆண்டு கால கசப்­பான போருக்கு முன்­னர் இந்த நாட்­டில் தமிழ், சிங்­கள மக்­கள் ஒரு தாய் மக்­க­ளாக வாழ்ந்­து­வந்­துள்­ள­னர். இனத்­தால் வேறு­பட்­ட­வர்­க­ளா­கச் சித்­தி­ரிக்­கப்­பட்டு வரு­கின்ற போதி­லும் மொழி, சம­யம், கலா­சா­ரம், பண்­பாடு, விருந்­தோம்­பல், பாரம்­ப­ரி­யம், நாக­ரி­கம் என்று வாழ்க்கை முறை­மை­யின் ஒவ்­வொரு அம்­சத்­தி­லும் இரு தரப்­பி­ன­ருக்­கும் இடை­யில் ஒன்­று­பட்ட தன்­மை­கள் நின்று நிலவி காணப்­ப­டு­கின்­றன. இதன் அடை­யா­ள­மா­கவே தமிழ் – சிங்­க­ளப் புத்­தாண்டு இரு இன மக்­க­ளா­லும் காலம் கால­மா­கக் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது.

தமிழ் – சிங்­கள இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்­டு­கின்ற உற­வுப் பால­மாக இரா­ணு­வத்­தின் யாழ்ப்­பாண மாவட்­டக் கட்­ட­ளைத் தலை­மை­ய­கம் செயற்­ப­டும் என்­ப­தை­யும் இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் கூறி வைக்க விரும்­பு­கின்­றேன் – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!