இந்திய மருத்துவ கழிவுகள் கரையொதுங்கிய சம்பவத்தில் இராஜதந்திர தலையீடுகள்!!!

இந்திய மருத்துவ கழிவுகள் இந் நாட்டின் கடற்பரப்பில் கரையொதுங்கிய சம்பவம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் தலையீடுகள் இருப்பதாக அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நாடாக இருப்பினும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு முறையான நடவடிக்கை இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புத்தளம் பகுதியின் கடற்பரப்பில் அண்மையில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கியதுடன் அவை தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் கண்டியில் வைத்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கழிவுகள் அகற்றப்பட்டிருப்பினும் அதனால் கடலிற்கு ஏற்பட்ட தாக்கம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை என கடலோர பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!