மீண்டும் சரியும் சிறிலங்காவின் நாணய மதிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

நேற்று தொடர்ந்து ஆறாவது நாளாக, டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிவைச் சந்தித்தது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 161.55 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆறு நாட்களில், அமெரிக்க டொலரின் மதிப்பு 23 சதங்களால் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 16ஆம் நாளுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 6.62 ரூபாவினால் வீழ்ச்சியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!