மகிந்தவின் இளைய சகோதரர் திடீர் மரணம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான சந்திர ருடோர் ராஜபக்ச தங்காலையில் இன்று மரணமானார் என்று ராஜபக்ச குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

70 வயதான சந்திர ராஜபக்ச, மகிந்த ராஜபக்சவுக்கு இளையவராவார். டி.ஏ.ராஜபக்சவின் நான்காவது புதல்வராவார்.

உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த சந்திர ராஜபக்ச இன்று மரணமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், அவர் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சராக இருந்த போது, தனிப்பட்ட செயலராக இருந்தவர்.

சிறிலங்கா அரசியலில் முக்கிய புள்ளிகளாக இருக்கும் சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!