விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டும்! -என்கிறார் சம்பிக்க

வடக்கில் தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.ஜாதிக ஹெல உரிமைய கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றது உள்நாட்டு யுத்தம் அல்ல, விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி இந்தியாவும், அமெரிக்காவும் இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்னெடுத்த யுத்தத்தையே இராணுவம் வெற்றிக்கொண்டது. அதனால் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் வடக்கில் தைரியமாக அரசியல் செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!