மஹிந்தவை பிரதமராக நியமிக்க மைத்திரிக்கு விருப்பமாம்!

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்வித அதிருப்தியும் இல்லை என கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமராக பதவியை ஏற்றுக்கொள்வதற்காக விருப்பத்துடன் ஜனாதிபதிக்கு பதிலளிக்க வேண்டும். இதனூடாக ஆட்சியில் மாற்றம் ஏற்படலாம். எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்குள் அரசாங்கத்தால் நாட்டிற்கு ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!