சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா?

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து நான் அறிந்திருக்கவில்லை. இது குறித்து ஊடகங்கள் மூலமே அறிந்து கொண்டேன் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள அரசின் மூலம் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அரசுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். அவர்கள் தற்போது அரசின் பங்காளிகள். இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது குறித்து நான் அறிந்திருக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் இதுவரையிலும் கலந்துரையாடவில்லை. எவ்வாறாயினும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுமா என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!