சமஷ்டி அடிப்படையிலான தீர்வு அவசியமில்லை – காலியில் சுமந்திரன்

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்று அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப்போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனையையும் ஆராய முடியாது.

நிலையான பெரும்பான்மையைக் கொண்ட நாடொன்றில் அனைத்து மக்களுக்கும் சமனான முறையில் குடியுரிமை, உரிமைகள் கிடைக்கத்தக்க வகையில் ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுதல் முக்கியமானது.

சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஒத்துக்கொள்வதுடன் ஏனைய மக்களுக்காக மறுசீரமைப்பு மற்றும் நீதிக்காக முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!