இலங்கையில் படையினர் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்க மறுக்கின்றனர்- ஐ.நாமனித உரிமை ஆணையாளர்

இலங்கை இராணுவம் நிலங்களை பொது மக்களிடம் கையளிப்பது தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுக்கின்றது என ஐக்கியநாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் ராத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

எகனமிஸ்ட் சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

துயரத்தில் சிக்கியுள்ளவர்களின் வலுவற்ற நிலையை நான் யாழ்ப்பாணத்தில் உணர்ந்தேன் என அவர் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பல தசாப்தங்களிற்கு முன்னர் படையினரிடம் தங்கள் நிலங்களை பறிகொடுத்த மக்கள் மிகவும் அடிப்படையான மற்றும் மோசமான நிலைமைகளின் கீழ் வருகின்றனர் எனவும் மனித உரிமை ஆணையாளர் எழுதியுள்ளார்.

அரசாங்கம் பொதுமக்களின் சொத்துக்கள் மற்றும் நிலங்களை விடுவிப்பது குறித்து அர்ப்பணிப்புடன் இருந்தாலும் படைத்தரப்பு அரசாங்கத்திற்கு அடிபணிய மறுக்கின்றது இதன் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்தும் துயரத்தில் சிக்குண்டுள்ளனர் எனவும் அவர் எழுதியுள்ளார்.

மியன்மார் படையினரால் ரொகிங்யா இனத்தவர்கள் பாரிய படுகொலைகளை செய்யப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை ஆணையாளர் சீனா அரசாங்கம் மியன்மார் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்

மேலும் வழமைக்கு மாறாக அமெரிக்க ஜனாதிபதி ரொகிங்யா இனத்தவர்கள் குறித்து ஐநா பாதுகாப்பு சபையில் கூட கருத்து தெரிவிக்கவில்லை என மனித உரிமை ஆணையாளர் எழுதியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!