சிறிலங்காவின் கடன் சுமைக்கு சீனா காரணமல்ல – வெளிவிவகார பேச்சாளர்

சீனாவின் கடன்கள், சிறிலங்காவுக்குப் பிரதான கடன்சுமையை ஏற்படுத்தவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவாசுன்யிங் தெரிவித்துள்ளார்.

பீஜிங்கில் கடந்த 31ஆம் நாள் நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

”கடந்த ஆண்டு சிறிலங்காவின் மொத்த வெளிநாட்டுக் கடன்களில் 10 வீதம் மாத்திரமே சீனாவிடம் பெறப்பட்ட கடன்களாகும்.

சீனா வழங்கியுள்ள கடன்களில் 61.5 வீதம், அனைத்துலக சந்தை வீதத்தை விடவும் குறைவான வட்டிக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைக் கடன்களாகும்.

சிறிலங்கா மத்திய வங்கியின் அறிக்கையின் படி, கடந்த ஆண்டில் சிறிலங்காவின் மொத்த வெளிநாட்டுக் கடன் 4,718.6 பில்லியன். ரூபாவாகும்.

இதில், 10 வீதம் மாத்திரமே சீனாவிடம் பெறப்பட்டது. சிறிலங்காவின் கடன் சுமைக்கு பிரதான காரணம், சீனாவிடம் பெறப்பட்ட கடன்களல்ல.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!