“அதிமேதாவித்தனமான சுமந்திரனின் கேள்விக்கு பங்காளிக் கட்சிகள் முடிவுகட்ட வேண்டும்”

சமஸ்டி என்றால் என்னவென்று தெரியுமா என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியின் தலைவர்களை பார்த்து சுமந்திரன் அதிமேதாவித்தனமாக கேள்வியெழுப்பியிருக்கும் நிலையில் அப் பங்காளி கட்சியினருக்கு வெட்கம், சூடு சுரணை இருந்தால் இது தொடர்பாக சரியான முடிவை எடுப்பார்கள் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

சுரேஸ் பிரேமச்சந்திரனது இல்லத்தில் இன்றைய தினம் (4) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சுமந்திரனது கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூறியிருக்கும் நிலையில் அவர்களை பார்த்து சுமந்திரன் ‘ பங்காளி கட்சியினருக்கு சமஸ்டி என்றால் என்னவென்று தெரியுமா அதன் உள்ளடக்கம் என்னவென்று தெரியுமா ‘ என அதி மேதாவி தனமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்தகைய நிலையில் அப் பங்காளி கட்சியினருக்கு உண்மையிலேயே வெட்கம், சூடு சுரணை எதாவது இருந்தால் இது தொடர்பான சரியான முடிவொன்றை எடுப்பார்கள் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!