சு.க.விலுள்ள மீதமானவர்களும் வெளியேறி விடுவார்கள் : ஜனாதிபதிக்கு டிலான் எச்சரிக்கை

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்சி சம்மேளத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறாவிட்டால் கட்சியில் இருக்கும் ஏனையவர்களும் வெளியேறிவிடுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தில் இருப்பதற்கு முடியாது. அதனால் கட்சியின் வருடாந்த சம்மேளனம் இடம்பெறுவதற்கு முன்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்ற செய்தியை நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றோம்.

அவ்வாறு சுதந்திர கட்சி வெளியேறாவிட்டால் தற்போது கட்சியில் இருப்பவர்களும் கட்சியில் இருந்து நீங்கிக்கொள்வார்கள் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!