கீத் நொயர் கடத்தல் குறித்து எதுவும் தெரியாது – விசாரணையில் கோத்தா தெரிவிப்பு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2008 மே 22ஆம் நாள் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்பட்டது.

நேற்றுக்காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்ற அவரிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்த விசாரணைகளின் போதே, கீத் நொயார் கடத்தலுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் ஏதும் தனக்குத் தெரியாது என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!