மகிந்த அணி­யு­டன் இணைந்­த­மையை மக்­கள் ஒரு­போ­தும் ஏற்­க­மாட்­டார்­கள்

மகிந்த அணி­யு­டன் இணைந்து ஆட்சி அமைக்க முற்­பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யின் நட­வ­டிக்­கையை மக்­கள் ஒரு­போ­தும் ஏற்­றுக் கொள்­ளவோ – மன்­னிக்­கவோ மாட்­டார்­கள். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார்.

வவு­னியா வடக்­குப் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர், உப­த­வி­சா­ளர் தெரிவு முடி­வ­டைந்த பின்­னர் ஊட­கங்­க­ளுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது,

நாங்­கள் மக்­க­ளால் ஏற்­றுக் கொள்­ளப்­பட்டு கூடு­த­லான ஆச­னங்­க­ளைப் பெற்­றி­ருந்­தோம். இருப்­பி­னும் அதிஷ்­டத்­தின் மூலம் இன்று நீதி வென்­றி­ருக்­கின்­றது. இந்த வன்னி மண்­ணிலே எங்­களை அழித்து ஒழித்து நிர்­க­தி­யாக்­கிய மகிந்­த­வின் கட்­சி­யோடு இணைந்து ஆட்­சி­ய­மைக்க ஆத­ரவு கேட்ட செயற்­பாட்டை தமிழ் மக்­கள் ஒரு­போ­தும் மன்­னிக்க மாட்­டார்­கள்.

யாழ்ப்­பா­ணத்­தில் நாங்­கள் ஈ.பி.டி.பியு­டன் இணைந்து ஆட்­சி­ய­மைக்­க­வில்லை. அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் சுய­மா­கவே செயற்­பட்­டார்­கள். அது அவர்­க­ளு­டைய சொந்த விருப்­பம்.

வவு­னியா நகர சபை­யில் தவி­சா­ள­ராக தமி­ழர் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு வாழ்த்­துக்­க­ளைக் கூறிக் கொள்­கின்­றேன் – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!