நிதிக்குற்றங்களை தடுப்பதற்கு அரசாங்கம் தீவிர முயற்சி ; மங்கள சமரவீர

இலங்கை அரசாங்கம் நிதிக்குற்றங்களை தடுப்பதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என நிதியமைச்சர் மங்களசமரவீர லண்டனில் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நிதியமைப்பு முறை வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில் நிதிக்குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் தரமுயர்த்தவேண்டியுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இந்த யதார்த்தத்தை நன்கு உணர்ந்துகொண்டுள்ளது. இதன் காரணமாக இந்த விடயம் தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிக்குற்றங்களை தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் நிதிநடவடிக்கைகள் தொடர்பான செயலணியுடன் இணைந்து செயலாற்றுகின்றது. இது தொடர்பான சட்டங்களை பலப்படுத்துகின்றது.

நிதிநடவடிக்கைகள் தொடர்பான செயலணியின் பரிந்துரையின் அடிப்படையில் சட்டதிருத்தங்களை மேற்கொள்வது உட்பட பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் எனவும் நிதியமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!