கலிபோர்னியாவில் மனைவி உட்பட ஐவரை சுட்டுக்கொலை செய்த நபர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நபர் ஒருவர் தனது மனைவி உட்பட ஐந்துபேரை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்பீல்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனைவியை வாகனத்தில் நகரபகுதிக்கு அழைத்து சென்றுள்ள அந்த நபர் அப்பகுதியில் வைத்து மனைவியையும் வேறு இரு ஆண்களையும் சுட்டுக்கொன்றுள்ளார்.

அதன் பின்னர் வீடொன்றிற்கு அந்த நபர் இருவரை சுட்டுக்கொன்ற பின்னர் தான் தப்புவதற்காக பெண்மணியொருவரும் குழந்தையொன்றும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனத்தை கடத்திச்செல்ல முற்பட்டவேளை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மிகக்குறுகிய நேரத்திற்குள் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!