மல்­வத்து, அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தி­களை இன்று சந்­தித்து ஆசி பெற­வுள்ள பிர­தமர்

தென்­னி ­லங்கை அர­சியல் தொடர்ந்து நெருக்­க­டி­யுடன் காணப்­படும் நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து மா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து ஆசி பெற­வுள்ளார். மேலும் தற்­போ­தைய அர­சியல் நிலை­வரம் குறித்து மா­நா­யக்க தேரர்­க­ளுக்கு பிர­தமர் தெளி­வு­ப­டுத்­துவார் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இது தொடர்பில் பிர­தமர் அலு­வ­லகம் தக­வல் தெரி­விக்­கையில்,

அர­சியல் ரீதி­யாக நாடு ஸ்திர­மற்ற நிலை­மையில் காணப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்­ட­னுக்கு சென்­றுள்ளார். அத்­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நுவ­ரெ­லி­யா­வுக்கு புத்­தாண்டை முன்­னிட்டு சுற்­றுலா பயணம் மேற்­கொண்­டுள்ளார்.

இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போ­தைய நாட்டின் அர­சியல் நிலை­வரம் குறித்து எடுத்­து­ரைப்­ப­தற்­காக இன்று மா­நா­யக்க தேரர்­களை சந்­திப்­ப­தற்­காக கண்­டிக்கு விஜயம் செய்­ய­வுள்ளார்.

இதன்­ பி­ர­காரம் கண்­டிக்கு விஜயம் செய்யும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று காலை அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து மா­நா­யக்க தேரர்­களை சந்­தித்து ஆசி பெற­வுள்­ள­துடன் அர­சியல் நில­வரம் குறித்து மா­நா­யக்க தேரர்­க­ளுக்கு தெளி­வுப­டுத்­துவார் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதன்­போது பிர­த­ம­ருக்கு மாநா­யக்க தேரர்கள் விசேட அறி­வு­ரை­ வழங்­கு­வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டி புனித தலதா மாளிகைக்கு சென்று பூஜை வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!