‘ஜனாதிபதி கொலைச் சதி” : சு.க. உறுப்பினர்களுக்கு தொடர்பு உள்ளதா? – மாற்று அணி கேள்வி

ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அது தொடர்பில் மௌனம் காத்து வருகின்றமை சதிகாரர்களுக்கு தேவையான முறையில் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது. அதனால் ஜனாதிபதி சட்டம் ஒழுங்கு அமைச்சை தனக்குக்கீழ் கொண்டுவரவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி தெரிவித்தது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாற்று அணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியை கொலைசெய்யும் சதித்திட்டம் ஒன்று இருப்பதாக பகிரங்கமாக தெரிவிக்கப்பட்ருக்கின்றது.

இதனை அரசாங்கம் பாரிய விடயமாக கண்டுகொள்வதாக தெரியவில்லை. சதித்திட்ட சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் அரசாங்கத்தில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 23 பேரில் சிறியானி விஜேவிக்ரமவை தவிர வேறு எவரும் இது தொடர்பில் எதுவும் கதைக்கவில்லை. அவர்கள் இவ்வாறு மௌனம் காப்பது சதிகாரர்களுக்கு தேவையான முறையில் செயற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுகின்றது எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!