பாதிக்கப்பட்டோரின் புகைப்படத்தை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது என சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளை வெளியிட பாட்னா ஐகோர்ட் தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா அமர்வு இன்று விசாரித்தது.

வழக்கு விசாரணையை அடுத்து, பாட்னா ஐகோர்ட் விதித்த தடையை நீக்கிய நீதிபதிகள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை எந்த வடிவத்திலும் வெளியிட கூடாது என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!