ஒரு மாதத்தில் 6 கொலைகள் : 2 என்கவுண்டர் : என்கவுண்டரை நேரடியாக ஒலிபரப்பிய ஊடகங்கள்

இந்தியாவின் உத்ரப்பிரதேசம் அலிகார் பகுதியில் கொலை வழக்கில் பொலிஸாரால் வலை வீசி தேடப்பட்டு வந்த 2 குற்றவாளிகளை பொலிஸார் என்கவுண்டர் செய்வதற்கு முன்னர் ஊடகவியலாளர்களை வரவழைத்து என்கவுண்டரை வீடியோ பதிவு செய்ய அனுமதியளித்துள்ளனர்.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு குற்றவாளிகளும் கடந்த ஒரு மாதக்காலத்திற்குள் மட்டும் 6 கொலைகளுடன் தொடர்புபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் குறித்த கொலை குற்றவாளிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த இருவரையும் மடக்கி பிடிக்க முயன்ற பொலிஸார் மீது குற்றவாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து மேலதிகமாக பொலிஸார் குவிக்கப்பட்டதோடு ஊடகவியலாளர்களும் வரவழைக்கப்பட்டனர்.

இரு கொலையாளிகளும் மறைந்திருந்து தாக்குதல் மேற்கொண்ட இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்து இருவரையும் மிகவும் சாதூரியமாக என்கவுண்டர் செய்தனர்.

பொலிஸாரின் என்கவுண்டரை வீடியோ எடுப்பதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!