நியூயோர்க் ஐ.நா நிலையத்தில் இன்று சிறிலங்கா அதிபர் உரை

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா நிலையத்தில், இன்று உரையாற்றவுள்ளார்.

நெல்சன் மண்டேலா அனைத்துலக அமைதி கருத்தரங்கிலேயே சிறிலங்கா அதிபரின் உரை இடம்பெறவுள்ளது.

ஐ.நா பொதுச் செயலர் அன்ரனியோ குரேரெசினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கில் உரையாற்ற சிறிலங்கா அதிபருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கில், மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி, வறுமையை ஒழிப்பதற்கான உத்திகள், குறித்து கவனம் செலுத்தப்படும் என்று ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நியூயோர்க் நேரப்படி இன்று காலை 10 மணியளவில் சிறிலங்கா அதிபரின் உரை இடம்பெறசுள்ளது.

இந்தக் கருத்தரங்கின் முடிவில் ஒரு கூட்டு அறிக்கையும் வெளியிடப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!