மனித உரிமைகள் பற்றி மேற்குலகம் பாடம் கற்பிக்க வேண்டியதில்லை! – கர்தினால் மல்கம் ரஞ்சித்

?????????????????????????????????????????????????????????
மேற்கத்தைய நாடுகளிடமிருந்து மனித உரிமைப் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.“மேற்குலக நாடுகளில் மனித உரிமைகள் மதமாக மாற்றமடைந்துள்ளன. அண்மையிலேயே மனித உரிமைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனினும் இலங்கையில் பல நூற்றாண்டுகளாக மத விழுமியங்களின் ஊடாக மனித உரிமைகள் போற்றப்படுகின்றன.

சரியான முறையில் நாம் வாழ்ந்தால் மனித உரிமைகள் எதுவும் தேவையில்லை. மத வழிபாடுகளில் உரிய முறையில் முன்னெடுக்காதவர்களே மனித உரிமைகளில் தொங்கி நிற்கின்றார்கள். இந்த ஈர்ப்புக்களினால் நாம் திசை மாறி விடக் கூடாது. பல் மதங்களைக் கொண்ட இலங்கையில் நூற்றாண்டுகளாக மனித உரிமைகள் பேணப்பட்டு வருவதாகவும், மேற்குலக நாடுகள் இலங்கைக்கு மனித உரிமைகள் குறித்து பாடம் புகட்ட முயற்சிப்பதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!