ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் திடீர் இராஜிநாமா!!!

ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி திடீரென தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

நிக்கி ஹேலியின் இராஜிநாமாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆனாலும் உடனடியாக நிக்கி ஹேலி தனது கடமைகளில் இருந்து நீங்கிக் கொள்ள மாட்டார் என்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் வரையில் கடமையில் இருப்பார் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கு குடியரசு வேட்பாளர் தேர்தலில் ட்ரம்பிற்கு மாற்று வேட்பாளராக நிக்கி ஹேலி அறியப்பட்டு வந்தார்.

இந் நிலையில் ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜிநாமாவிற்கான காரணம் இது வரை அறிவிக்கப்படவில்லை.

இதே வேளை 2020ஆம் ஆண்டு தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட போவதில்லை என்றும் ட்ரம்பை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன் என்றும் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

46 வயதான நிக்கி ஹேலி அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி இனத்தினர் ஆவார்.

ஹேலி அமெரிக்க தூதராக நியமிக்கப்படும் முன்னர் தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!