அமெரிக்காவில் காருடன் மாயமான பெண்: அங்கிருந்த கண்டெய்னரை திறந்தபோது அவரது உறவினர் கண்ட காட்சி!

ஹொட்டல் ஒன்றிற்கு சென்று திரும்பும்போது கடைசியாக காணப்பட்ட ஒரு பெண் மர்மமான முறையில் காருடன் மாயமானார். அமெரிக்காவின் Kansasஇல் பாதிரியாராக பணியாற்றும் Adam Carterஇன் மனைவி Marilane Carter (36). ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி தன் பெற்றோரைக் காணச் செல்வதாக கூறிச்சென்றுள்ளார் அவர். 2ஆம் திகதி Missouriயில் உள்ள ஹொட்டல் ஒன்றில் சிறிது நேரம் தங்கிவிட்டு காருடன் திரும்பிய Marilane, பின்னர் காருடன் மாயமாகியுள்ளார். அன்று அவர் தனது கணவனுடன் மொபைலில் பேசியுள்ளார்.

அதன் பின், அலபாமா செல்லும் வழியில் கடைசியாக தனது பெற்றோருக்கு போன் செய்து பேசும்போது குழப்பமான நிலையில் இருந்துள்ளார் Marilane. அவ்வளவுதான், அதற்குப்பிறகு அவரது மொபைல் போன் செயலிழந்துள்ளது. Marilaneஐக் காணாததால் பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, பொலிசார் தீவிரமாக தேடியும் இரண்டு வாரங்களாகியும் அவர் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், அவர் கடைசியாக எங்கிருந்து மொபைல் போனில் பேசினாரோ, அந்த பகுதிக்கு செவ்வாயன்று சென்ற Marilaneஇன் மாமா, அங்கு எங்காவது அவர் இருப்பாரா என்று தேடியிருக்கிறார். அந்த பகுதியில் மூன்று கண்டெய்னர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு கண்டெய்னரின் தாழ்ப்பாள் திறந்திருந்திருக்கிறது. அதற்குள் ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என அதை திறந்து பார்த்திருக்கிறார் Marilaneஇன் மாமா.

அப்போது அந்த கண்டெய்னருக்குள் Marilaneஇன் கார் நிற்பதைக் கண்டு பதறிப்போய் உள்ளே சென்று பார்க்க, அந்த கண்டெய்னருக்குள் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து பொலிசாரை அழைத்துள்ளார். பொலிசார் வந்து காரை சோதனையிட்டதில், அது Marilaneஇன் கார்தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், காருக்குள் அவரது கிரெடிட் கார்டு இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த உடல் Marilaneஉடையதுதான் என்று நம்புவதாக தெரிவித்துள்ள பொலிசார், தங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் Marilaneஉடையது என நம்பப்படும் அந்த உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் Marilaneஇன் குடும்பத்தினரை, குறிப்பாக அவரது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளை கடும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!