காங்கோவில் வேகமாக பரவும் கொடிய நோய்: 31 பேர் பலி!

ஆபிரிக்க நாடானா காங்கோவில் வேகமாகப் பரவும் கொள்ளை நோய்க்கு இதுவரை 31 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு காங்கோவில் உள்ள இட்டூரி மாகாணத்தின் பிரிங்கி பகுதியில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 13 வரை இந்த பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட பலரை அடையாளம் காணப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதுவரை 520 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 31 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி 3 மாத குழந்தை உட்பட இளையோர்களையே இந்த நோய் அதிகமாக பாதிப்பதாக தெரிய வந்துள்ளது.

எலிகள் திடீரென்று கொத்தாக மரணமடைந்த்தன் பின்னரே, காங்கோவில் இந்தக் கொள்ளை நோய் பரவியதாக கூறப்படுகிறது.

கருப்பு மரணம் என அறியப்படும் இந்தக் கொள்ளை நோயானது 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவின் பெரும்பாலான மக்கள் இறக்க காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில் வட ஆபிரிக்காவையும் ஆசியாவையும் இந்த நோய் பெரிதும் தாக்கியது.

மனித வரலாற்றில் இதுவரை அதிக உயிர் இழப்பை ஏற்படுத்திய பெருந்தொற்று இது என்றே கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!