வாட்டும் கனமழை: மொத்தமாக மூழ்கிய சுவிஸ் மாநிலம்!

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாநிலத்தில் ஒரு மாதத்தில் கொட்டித்தீர்க்க வேண்டிய மழை, இரண்டு நாட்களில் பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

1918கு பிறகு இதுபோன்ற உக்கிரமான மழையை டிசினோ மாநிலம் எதிர்கொண்டதில்லை என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஜூலை மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மொத்த மழையின் மூன்று மடங்கு, கடந்த இரு நாட்களில் கொட்டித்தீர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

மான்டே ஜெனரோசோ பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கன மழை மற்றும் Breggia நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி எச்சரிக்கை நடவடிக்கையாக Balerna பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்று மூடப்பட்டுள்ளது.

Mendrisiotto பகுதியில் மொத்தமாக நிலச்சரிவு, பெருவெள்ளம், சுவர் இடிந்து விழுந்து விபத்து, மரங்கள் வேருடன் சாய்ந்தும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

மட்டுமின்றி, சாலைகள் மொத்தமும் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!