இலங்கையில் அறிவிக்கப்படும் கொரோனா தரவுகளால் சர்ச்சை

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கோவிட் தொற்றுகளை விட அதிகமான நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் வெளியிடப்பட்ட தரவுகள் தவறானவை எனவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தினசரி அறிவிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமான தொற்றாளர்கள் உள்ளனர்.. வெளியிடப்படும் புள்ளிவிவரங்கள் தவறானவை. இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து கடுமையான சிக்கல்கள் உருவாகியுள்ளன.

எப்படியிருப்பினும் தொற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட மூன்று ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து இதுவரையில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்னமும் அடையாளம் காணப்படாத அதிக எண்ணிக்கையிலானோர் சமூகத்தில் இருக்கலாம். நெதர்லாந்தில் இதுவரையில் லொக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய மாறுபாடு நாட்டை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதனை சிந்தித்து அவதானத்துடன் நத்தார் பண்டிகையை கொண்டாடுமாறு பொது மக்களிடம் கேட்டுகொள்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!