எரிபொருள் பற்றாக்குறைக்கு தீர்வு காண கடல் வழியாக பயணத்தை ஆரம்பித்த கப்பல்

இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா ஏற்கனவே கடனுதவி வழங்கியுள்ள நிலையில் மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்காக இரண்டாம் கட்ட கடனுதவி தொடர்பில் உயர் மட்டங்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி சேவையை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

எவ்வாறாயினும் குறித்த விடயம் தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை மத்திய வங்கிகளுக்கிடையில் இதுவரை எவ்வித உத்தியோகப்பூர்வ ஆவணங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியா கடனடிப்படையில் வழங்கி வருகின்றது,.

இந்த நிலையில் இன்றைய தினம் இந்திய கடனுதவித் திட்டத்தில் வழங்கப்படும் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கூறியுள்ளது,

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!