“ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம்”

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மத்திய வங்கியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்து தனது நண்பரான தினேஸ் வீரக்கொடிக்கு பதவியை வழங்குமாறு பிரதமர் கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார்.


கோபமடைந்த ஜனாதிபதி 
எவ்வாறாயினும் இதற்கு ஜனாதிபதி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் அதனைச் ஒரு போதும் செய்ய முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை ஆட்சேபித்துள்ள ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

விக்ரமசிங்கவின் பதிலால் ஜனாதிபதி கோபமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல், ராஜபக்ச குடும்பத்தின் உறவினர் திருக்குமார் நடேசனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விசேட சந்தி்ப்பை ஏற்பாடு செய்த திருக்குமார்

திருக்குமார் நடேசன் பிரபல தொழிலதிபர் மற்றும் நிருபமா ராஜபக்சவின் கணவர் ஆவார். அண்மையில் திருக்குமார் நடேசன் டுபாயில் இருந்தபோது ரணில் விக்கிரமசிங்க அவரை அழைத்து தனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

அதன்படி, நாட்டிற்கு வருகை தந்த திருக்குமார் நடேசன் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். இக்கலந்துரையாடலில் நடேசனும் கலந்துகொண்டதாக அறியமுடிகிறது.

இதேவேளை, மல்வானையில் உள்ள பிரபல வீடு தொடர்பில் திருக்குமார் நடேசன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில்,  நேற்று நீதிமன்றம் அவரை குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து விடுதலை செய்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!