இலங்கை அரச அதிகாரிகளுக்கு ஆபத்து! அறிமுகமாகும் புதிய திட்டம் November 7, 2022 3:29 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest இலங்கையில் இருக்கும் அரச ஊழியர்கள் குறித்து புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதன்படி, அரச அதிகாரிகள் மீதான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முறைப்பாடளிக்க முடியும்அந்தவகையில், 1905 என்ற இலக்கம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் அரச அதிகாரிகள் மீதான இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராமநிர்வாக அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் கடமையாற்றும் அதிகாரிகளின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…