இந்தியாவை சென்றடைந்தார் புட்டின் ; கோபத்தில் அமெரிக்கா

ரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்றைய தினம் இந்தியாவை சென்றடைந்துள்ளார்.

நேற்றைய தினம் இந்தியா வந்தடைந்த புட்டினை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவாஜ் வரவேற்பளித்ததுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புட்டினை கட்டித் தழுவி வரவேற்பு கொடுத்தார். இதனையடுத்து இருவருக்கிடையிலான தனிப்பட்ட சந்திப்பு நடந்தது. அதன் பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.

புட்டினின் இந்த விஜயத்தின் போது இந்தியாவுடன் விண்வெளி துறை, அணுசக்தி, பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய துறைகளிலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

மேலும் எஸ் 400 ஒப்பந்தத்தினூடாக ரஷ்யாவிடம் இந்தியா, எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க உள்ளது. இது மிகவும் வலிமை வாய்ந்த திறன் மிக்க ஏவுகணை ஆகும். இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

புட்டினின் இந்த ஏவுகணை ஒப்பந்தம் அமெரிக்காவை கோபப்படுத்தி இருக்கிறது. இதனால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!