இடைக்கால அரசாங்கத்தை அமைக்க சு.க.வுக்கு எண்ணமில்லை – துமிந்த திஸாநாயக்க

சுதந்திர கட்சிக்கு இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான எண்ணம் இல்லை. அத்தோடு 2020 வரை தேசிய அரசாங்கமே தொடரும் என அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு இடைக்கால அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற யோசனை ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் முன்வைக்கப்பட்டது.எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்தமை குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!