கூட்டு அரசைப்பலம் இழக்கச் செய்யும் மகிந்தவின் வியூகங்கள்!!

கூட்டு அரசு இந்த வருட ஆரம்­பத்­தி­லி­ருந்து பல வித­மான அர­சி­யல் நெருக்­க­டி­க­ளுக்­குள் சிக்­கித்­த­வித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. அர­ச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி சேன, தலைமை அமைச்­ச­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரது தலை­மை­யி­லான இரு பெரும் தேசி­யக் கட்­சி­கள் கூட்டுச் சேர்ந்து 40 மாதங்­கள் கால­மாக கூட்டு அரசை நாட்­டில் முன்­னெ­டுத்­துச் சென்­றுெ­காண்­டி­ருந்­தா­லும், அது பல­வீ­ன­முள்­ள­தொரு அர­சாக இருக்­கின்­ற­ப­டி­யால் எதிர்க்­கட்­சி­க­ளின் ஒன்­று­பட்ட எதிர்ப்­பு­க­ளுக்­கும் பஞ்­ச­மில்­லா­தி­ருக்­கின்றது.

மைத்­தி­ரி­பால சிறிசேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உள்­ள­கப் பிள­வு­கள், அர­ச தலை­வ­ரைக் குழப்­ப­மான­ தொரு நிலைக்கு இட்­டுச் செல்­கின்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பலம் குறைந்த உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட எதிர்க்­கட்­சித் தலை­மைப் பத­வியை ஏற்­றுக்­கொண்டு, முதன்மை எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­பட்­டா­லும், முன்­னை­நாள் அர­ச தலை­வ­ரான மகிந்த ராஜ­பக்ச தலை­மை­யி­லான கூட்டு எதி­ர­ணியே பல­மா­ன­தொரு எதிர்க்­கட்­சி­போல் நாட்­டில் இயங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது அர­சி­யல் ஆய்­வா­ளர்­க­ளின் கருத்­தா­க­வுள்­ளது.

தமி­ழர் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண­வேண்­டிய
கடப்­பாடு அரச தலை­வ­ருக்கு உள்­ளது

அர­ச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன ஈழத்­த­மிழ் மக்­க­ளின் பிரச்சினை­க­ளுக்குத் தீர்வு காண வேண்­டிய முக்­கி­ய­மான கடப்­பாடு கொண்­ட­வ­ராக இருக்­கின்­றார். 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட்­டாம் திகதி நாட்­டில் இடம்­பெற்ற அர­ச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் ஆட்சி மாற்­றம் தேவை என்ற விதத்­தில் இந்­தியா உட்­பட மேற்­கு­ல­கம் மாற்­ற­மொன்றை எதிர்­பார்த்­தி­ருந்­தது.

தென்­னி­லங்கை மக்­க­ளில் ஒரு தரப்­பி­ன­ரும், தமிழ், முஸ்­லிம் மக்­க­ளில் பெரும்­பா­லோ­ரும் மகிந்­த­வின் அரசை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தில் நாள்களை எண்­ணிக்­கொண்­டி­ருந்­த­னர். அதன் அடிப்­ப­டை­யில் மக்­க­ளின் விருப்­பப்­படி ஆட்சி மாற்­றம் ஏற்­பட்டு, தற்­போது நாற்­பது மாதங்­கள் கடந்­துள்­ளன.

இடைப்­பட்ட இந்­தக் காலப்­ப­கு­தி­யில், அர­சு­டன் இணைந்து செயற்­ப­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, முதன்மை எதிர்க்­கட்­சி­யாக நாடா­ளு­மன்­றத்­தில் செயற்­ப­டு­கி­றது. இன்­றைய நல்­லாட்சி அர­சில் அங்­கம் வகிக்­கும் பிர­தான பெரும்­பான்­மை­யி­னத்­தைச் சார்ந்த இரு கட்­சி­க­ளின் கூட்­டாட்சி மீது தமிழ் மக்­கள் வைத்­தி­ருந்த நம்­பிக்­கை­யைத் தற்­போது அவர்­கள் படிப்­ப­டி­யாக இழந்து வரு­கின்­ற­னர்.

ஊழல் மோச­டியை ஒழிப்­போம் என்ற பரப்­புரை வாச­கத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி அர­ச தலை­வர் தெரி­விற்­கான தேர்­த­லில் வெற்­றி­பெற்ற மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ரம­சிங்­க­வுக்­ குமி­டை­யில் ஏற்­பட்­டுள்ள மோதல் கள் தீர்க்­கப்­ப­டாத நிலை­யில், கூட்டு அர­சி­லும் ஊழல் மோச­டி­கள் மலிந்­து­விட்­டன என்ற குற்­றச்­சாட்­டுக்­கள் அர­ச த­லை­வர் உட்­பட இரு கட்­சி­க­ளைச் சேர்ந்த அமைச்­சர்­க­ளா­லும் முன்­வைக்­கப்­பட்ட­தைய­ டுத்து, அர­சின் உறுதித் தன்மை பின்­ன­டைவு கண்­டுள்­ளது.

நாடா­ளு­மன்ற அமர்­வு­க­ளின்­போது உறுப்­பி­னர்­கள் மத்­தி­யில்
எப்­போ­தும்­ மோ­தல்­க­ளும் வாக்­கு­வா­தங்­க­ளும்

இந்த வருட ஆரம்­பத்­தி­லி­ருந்து கூட்டு அர­சில் அங்­கம் வகிக்­கும் உறுப்­பி­னர்­கள் மற்­றும் அமைச்­சர்­கள் ஒரு­வர்­மீது ஒரு­வர் சீறிப்­பாய்­வ­தும், காறி உமிழ்­வ­தும், சண்டை சச்­ச­ர­வு­க­ளில் ஈடு­ப­டு­வ­து­மாக அமை­தி­யற்ற சூழலை நாடா­ளு­மன்­றில் ஏற்­ப­டுத்தி வந்­த­னர். நாடா­ளு­மன்­றக் கூட்­டங்­க­ளும் குழப்­ப­மும் கூச்­சலு ­மாக அமைந்­தன. நாடா­ளு­மன்­றத்­தில் ஏற்­பட்ட கருத்து மோதல்­கள், தர்க்­க­வா­தங்­கள், தகாத வார்த்­தைப் பயன்பாடுகள் ஆட்­சி­யா­ளர்­கள், எதிர்­த­ரப்பு அர­சி­யல்­வா­தி­கள் ஆகிய தரப்­பி­னர்­க­ளால் தாரா­ள­மா­க மேற்கொள் ளப்பட்டு கருத்து முரண்­பாடுகள் உச்­சத்­துக்­குச் சென்­றி­ருந்­தன.

மகிந்த தலை­மை­யி­லான எதி­ர­ணிக்­கட்­சி­கள், கூட்டு அரசை நிம்­ம­தி­யாக ஆட்சி நடத்த ­வி­டாது இடை­யூ­று­க­ளை­யும், அழுத்­தங்­க­ளை­யும் உள்­ளே­யும், வௌி யே­யு­மி­ருந்து கொடுத்தவண்­ண­மி­ருந்­த­ன. அரசு மீது பலத்த கண்­ட­னங்­க­ளைத் தெரி­விப்­பதுடன், ஆர்ப்­பாட்­டங்­கள், பேர­ணி­கள், போராட்­டங்­களை தொடர்ச்­சி­யாக நடத்­து­வ­தில் தாம் ஒரு­போ­தும் சளைத்­த­வர்­க­ளல்ல எனக் காட்­டிக் கொண்டு, மீண்­டும் ஆட்சி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றத் துடித்­துக்­கொண் டி­ருந்த மகிந்த ராஜ­பக்ச ‘‘இந்த அரசை வீட்­டுக்கு கூடிய சீக்­கி­ரமே அனுப்பி ­வைப்­போம். எமது ஆட்­சியை மீண்­டும் அமைப்­போம்’’ என அடிக்­கடி சூளு­ரைத்து வந்­தார்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் பெறுபேறுகளின் பின்­ன­டைவு, கூட்டு அர­சைப் பாதித்­தமை கண்­கூடு

கடந்த பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி நாட்­டில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­த­ லில் மகிந்த தலை­மை­யி­லான பொது மக்­கள் முன்­னணி அதி­க­மான சபை­க­ளின் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்றி பெரு­வெற்­றி­யைப் பெற்­றது. மகிந்த ராஜா­பக்ச அணி­யி­னர், மக்­கள் ஆத­ரவு தங்­கள் பக்­க­மே­யி­ருப்­ப­தாக உறு­திப்­ப­டுத்­திக் கொண்­ட­பின்­னர், தொடர்ச்­சி­யாக கூட்டு அர­சுக்­கான நெருக்­க­டி­களை ஏற் படுத்­தத் தயா­ரா­யி­னர்.

அர­ச தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­ன ­வின் தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்­றும் தலைமை அமைச்­ச­ரான ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐ. தே. கட்சி என்­ப­வற்­றுக்கு உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் ஏற்­பட்ட தோல்­வி­யை­யும், அதன் தொடர்ச்­சி­ யாக அவ்­வி­ரு­வ­ருக்­கு­மி­டை­யில் ஏற்­பட்ட கருத்து வேறு­பா­டு­க­ளை­யும், மகிந்த தனக்­குச் சாத­க­மாக ஆக்­கிக்­கொண்டு, தலைமை அமைச்­சர் மீது நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை ஒன்­றைக்­கொண்­டு­வந்து ரணிலை பத­வி­யி­றக்­கச் செய்­ய­வும், மேலும் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தி ஆட்­சி­யைக் கைப்­பற்­று­கின்ற சூட்­சும­ மான திட்­டத்­தை­யும் தயா­ரித்து வைத்­தி­ருந்­தா­லும், இறு­தி­யில் ரணில் மீது கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை தோல்வி கண்­ட­மை­யால் மகிந்த தமது அந்­தத் திட்­டத்­தில் தோல்­வி­யைத் தழுவ நேர்ந்­தது.

கூட்டு அரசு 40 மாதங்­க­ளாக ஆட்சி அதி­கா­ரத்­தில் இருந்­த­தா­லும், முன்­னாள் அர­சுத் தலை­வ­ரான மகிந்த ராஜபக்ச, கூட்டு அர­சின் கொள்கை வகுப்­பா­ள­ராக இருக்­கின்­றாரா? என்ற சந்­தே­கம் நாட்டு மக்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டா­ம­லில்லை.

தென்­னி­லங்­கை­யில் அண்­மைய நாள்­க­ளாக ஏற்­பட்­டுள்ள குழப்­ப­மான அர­சி­யல் சூழ்­நி­லைக்கு மத்­தி­யில், தமி­ழர்­க­ளி­னது பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு முயச்சியாவும் தற்­போது ஓரம் கட்­டப்­ப­டக்­கூ­டிய சூழ் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

தமிழ்த்­த­லை­மை­க­ளும் தமது இருப்­பைத் தக்­க­வைக்க அர­சுக்­குத் துணை­ போ­கும் விதத்­தில் தங்­க­ளது அர­சி­யலை நகர்த்­திக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். தமி­ழர்­க­ளு­டைய விட­யத்­தைப் பொறுத்­த­வ­ரை ­யில் அர­சு வழங்­கு­கின்ற வாக்­கு­று­தி­கள் யாவும் காற்­றோடு காற்­றாக கலைந்து போய்­வி­டு­கின்றன.

கூட்டு அர­சின் போக்குக் குறித்து தமிழ்­மக்­கள் அதி­ருப்தி

கூட்டு அரசு, தனது பத­விக்­கா­லத்­தில் பாதி­யைக்­க­டந்து முடித்­து ­விட்­டா­லும், அர­சின் போக்­கா­னது, தமிழ் மக்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கை­யீ­னத்­தை­யும், விரக்­தி­யை­யும் உரு­வாக்­கி­விட்­டது. உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தல் முடி­வு­க­ளுக்குப் பின்­னர் மகிந்த ராஜ­பக்­ச­வின் அர­சி­யல் மீளெ­ழுச்சி என்­பது, கூட்டு அர­சுக்­குப் பெரும் பின்­ன­டைவையும், வீழ்ச்­சியையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது மட்­டு­மின்றி தமிழ் மக்­கள் மீதான அவரது பார்­வை­யும், கரி­ச­னை­யும் குறைந்­துள்ள­ தென்­பதை அவ­தா­னிக்­கக்­கூடியதா­க­வுள்ளது.

மகிந்த தரப்­பின் உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­தல் வெற்றி , மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை பாதிப்­ப­டை­யச் செய்­துள்­ள­து­டன், ரணில் விக்­கி­ர­ம­சிங்க மீதான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யின் பின்­னர் அது சுதந்­தி­ரக் கட்­சியை மேலும் பிளவு பட­வைத்­துள்­ளது. மகிந்­த­வின் சூழ்ச்சி அர­சி­யல் வியூ­கம், கூட்டு அர­சுக்கு நிம்­ம­தி­யற்ற சூழ்­நி­லை­யைத் தோற்­று­வித்­துள்­ளது.

2017 மற்­றும் 2018 ஆம் ஆண்­டு­க­ளில் கூட்டு அர­சைத் தூக்கி எறி­வோம் என்று மகிந்த தலை­மை­யி­லான எதி­ர­ணிக் கட்­சி­கள் ஒன்­று­சேர்ந்து போர்க்­கொடி தூக்­கி­யி­ருந்­த­ன. போராட்­டங்­கள் பல­வற்றை நடத்­தி­யி­ருந்­த­ன. மகிந்த ராஜபக்ச தலை­மை­யில் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கிற புதிய கட்­சி­யான சிறி­லங்கா பொது மக்­கள் முன்­னணி என்ற அர­சி­யல் கட்சி, நடை­பெற்­று­மு­டிந்த உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­த­லில் பெரி­ய­தொரு வெற்­றி­யைப் பெற்­றுக் கொண்ட பின்­னர், கூட்டு அர­ சுக்கு தலை­யி­டி­யா­கவே இருப்­ப­த­னால், மக்­க­ளின் விரக்­தி­யும், வெறுப்­பும் அதி­க­ரித்­துச் சென்று கொண்­டி­ருக்­கின்­றன.

தற்­போது கூட்டு அரசு பல­வீ­ன­ மா­கி­விட்ட நிலை­யில் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­லி­ருந்து 16 உறுப்­பி­னர்­கள் வில­கி­விட் டுள்­ள­ தால் மீண்­டும் மீண்­டும் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­கள் நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்த் தரப்­பி­ன­ரால் கொண்டு வரப்­ப­டு­கின்ற பல காட்­சி­களே நாடா­ளு­மன்­றத்­தில் அரங்­கே­றக் கூ­டி­ய­தா­க­வி­ருக்­கும்.

கிரா­மிய மட்­டத்­தில் மகிந்­த­வுக்­கான ஆத­ரவு
கணி­ச­மான அளவில் அதி­க­ரிப்பு

கிரா­மப்­புற மட்­டங்­க­ளில் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு ஆத­ரவு அதி­க­ரித்­துக் கொண்­டி­ருப்­ப­தா­கக் கொள்­ள­மு­டி­கின்­றது. உள்­ளூ­ராட்­சிச் சபை­ களுக்­கான தேர்­த­லில் பெற்ற வெற்­றி­கள் இனி­வ­ரு­கின்ற காலங் க­ளில் நடை­பெ­றப்­போ­கின்ற மாகா­ண­ ச­பைத் தேர்­த­லி­லும் மகிந்த அணி­யி­னர் சாத­க­மாக வெற்­றி­யைப் பெற்­றுக் கொள்­வ­தற்­கும், இன்­றைய கூட்டு அர­சின் மீதான நெருக்­க­டி­க­ளைத் தொடர்ந்து ஏற்­ப­டுத்­திக் கொள்­வ­தற்­கும் மகிந்ட தரப்­பிற்கு வாய்ப்பு வழங்­கி­யுள்­ளது.

மகிந்த ராஜபக்ச சந்­தர்ப்­பத்­திற்கு ஏற்­ற­வாறு காய்­களை நகர்த்­து­வ­தில் வல்­ல­வர். அர­சி­யல் நெளிவு, சுழி­வு­கள் யாவும் அவ­ருக்­குக் கைவந்த கலை­யா­கும். இன­வா­தம் என்ற அர­சி­யல் ஆயு­த­மும், போர் வெற்­றி­யும், தமி­ழி­னத்­திற்­கான எந்த வித­மான உரி­மை­க­ளும் வழங்­கக்­கூ­டாது என்­ப­தி­லும், புதிய அர­ச­மைப்­புச் சீர்தி­ ருத்­தச் சட்­ட­ மூ­லம், தமி­ழி­னத்­திற்­கான சாத­க­மான விட­யங்­க­ளைக் கொண்­டி­ருப்­ப­தா­கக் கூறி எதிர்ப்­பது போன்­ற­வற்றை உட­னுக்­கு­டன் எதிர்ப்புப்பரப்புரையாக்கு­வ­தும் அதனை சிங்­க­ள­மக்­க­ளுக் குத் தௌிவு­ப­டுத்தி, தொடர்ந்து மகிந்த தன்­னைக் கதா­நா­ய­க­னாக சித்த­ ரித்­துக் காட்­டு­வ­தி­லும், நல்­லாட்சி அர­சைக் கவிழ்ப்­ப­தி­லும் குறி­யாக இருக்­கும் வரை­யில், மைத்­தி­ரியோ ரணிலோ நிம்­ம­தி ­யாக ஆட்­சி­யைத் தொட­ர­மு­டி­யாது. தமிழ் மக்­கள் மீதான பல அடிப்­ப­டைப்­பி­ரச்சினைக­ளுக்­கும் முடிவு கிடைக்­கக்­கூ­டிய சாத­க­மான நிலை­யும் இல்­லா­மல் போகக் கூ­டிய நிலையே தொட­ரும் என்றே கருத வேண்­டி­யுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!