எனது வீட்டுக்கு மகிந்த வந்தது உண்மை – ஒப்புக் கொள்கிறார் எஸ்.பி.திசநாயக்க

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், தனது வீட்டில் இரகசியப் பேச்சுக்கள் ஏதும் நடத்தப்படவில்லை என்று, அண்மையில் கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் எஸ்.பி.திசநாயக்கவில் இல்லத்தில் சந்தித்து, இரகசியப் பேச்சு நடத்தியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய வந்த நிலையிலேயே, அவர் நேற்று ஒரு அறிக்கை மூலம், அந்தச் செய்திகளை மறுத்துள்ளார்.

எனினும் தனது வீட்டில் அளிக்கப்பட்ட ஒரு சிறப்பு இராப்போசன விருந்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றார் என்பது உண்மையே என்றும் எஸ்.பி.திசநாயக்க கூறியுள்ளார்.

“ அந்த இராப்போசன விருந்தில் சிறப்பான எந்த அரசியல் கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. எனினும், அந்த விருந்தில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மகிந்த ராஜபக்ச வழக்கமான கலந்துரையாடலை நடத்தினார்.

அந்தக் கலந்துரையாடல், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றை மையப்படுடுத்தியதாக இருந்தது” என்றும் எஸ்.பி.திசநாயக்க தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!